முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் புயல், மழை எச்சரிக்கை எதிரொலி: முதல்வர் தலைமையில் ஆய்வு நடத்த அனுமதி கோரி தேர்தல் கமிஷனுக்கு தமிழக அரசு கடிதம்

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் புயல்-மழை எச்சரிக்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்த தமிழக அரசு தேர்தல் ஆணையத்தின் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

நடத்தை விதிமுறை...

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சென்ற 18-ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 23 நடக்கிறது. அதுவரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும். இதனால் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆய்வுகள் நடத்து தொடர்பான தடையும் அமலில் இருக்கும்.

தலைமை செயலாளர்...

இந்நிலையில் தமிழகத்தில் மழை அச்சுறுத்தல் குறித்து முதல்வர், தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்த தேர்தல் கமிஷன் அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியிருக்கிறோம். அது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் வரை தலைமை செயலாளர் மற்றும் அரசு செயலாளர்கள் ஆய்வுகள் நடத்தலாம். கோடை விழா உள்ளிட்ட விழாக்களில் அரசியல் சம்பந்தப்பட்ட பிரமுகர்கள் கலந்துகொள்ளக்கூடாது. அரசுத்துறை செயலாளர்கள் பங்கேற்கலாம்.

பொதுபார்வையாளர்கள்...

பத்து வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தும் தேதி இன்னும் முடிவாகவில்லை. அதில் நடந்துள்ள தவறுகள் என்னென்ன என்பது தொடர்பாக மறு ஆய்வு செய்த பின்னர் அதுபற்றி முடிவெடுக்கப்படும். இதுவரை நான்கு தொகுதிகளில் நடைபெறும் தேர்தலைத்தொடர்ந்து விதிமுறைகள் மீறி கொண்டு செல்லப்பட்ட ரூ.15 லட்சத்து 18 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.12.18 லட்சமும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.3 லட்சமும் பிடிப்பட்டுள்ளது. நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தல் பாதுகாப்பு குறித்து தேர்தல் டிஜிபியுடன் இன்று (நேற்று) ஆலோசனை நடத்தினேன். நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் கூடுதலாக போலீஸ்பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இடைத்தேர்தலுக்கான சிறப்பு பொதுபார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த தேர்தலில் பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வழங்கியுள்ளார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து