செந்துறை புனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திங்கட்கிழமை, 6 மே 2019      திண்டுக்கல்
6 chruch news

நத்தம்,-  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறையில் உள்ள  புனித சூசையப்பர்  ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இதையொட்டி கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்ட கொடி பவனி நடந்தது. ஆலயத்தில் தொடங்கிய பவனி  நேதாஜிநகர்,பாத்திமாநகர்,சந்தைப்பேட்டை,குரும்பபட்டி வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது.இதைத் தொடர்ந்து பங்குத்தந்தையர்கள் ஆரோக்கியம், ஜான்ஜெயபால், பிரிட்டோ ஆகியோர் தலைமையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.. தொடர்ந்து புனித திருவிருந்து திருப்பலி,புனித செபஸ்தியார் வேண்டுதல் பொங்கல்,திருப்பலியை தொடர்ந்து சப்பர பவனி நடைபெறும். பின்னர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் புனித சூசையப்பர்,செபஸ்தியார் உள்ளிட்ட  புனிதர்களின் தேர்பவனி நடைபெறும். அதைத்தொடர்ந்து திருப்பலியும்,அதன்பின் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து