நான்கு முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற ஒரே கேப்டன் ரோகித் சர்மா !

திங்கட்கிழமை, 13 மே 2019      விளையாட்டு
rohit sharma 2019 05 13

ஐதராபாத் : ஐ.பி.எல். கோப்பையை ஐந்து முறை கைப்பற்றிய ஒரே வீரர் என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

4-முறை வென்ற...

ஐ.பி.எல். 2019 சீசன் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஹிட்மேன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - தல எம்எஸ் டோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்று கோப்பை 4-வது முறையாக கைப்பற்றியது. இந்த நான்கு முறையும் சென்னை அணியின் கேப்டனாக ஹிட்மேன் ரோகித் சர்மாவே இருந்துள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல். கோப்பையை நான்கு முறை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

5-முறை முத்தம்...

மேலும், டெக்கான் சார்ஜர்ஸ் அணி 2009-ம் ஆண்டு கில்கிறிஸ்ட் தலைமையில் கோப்பையை வெல்லும்போது அந்த அணியில் இடம்பிடித்திருந்தார். அதன்பின் 2013, 2015, 2017, 2019 ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக கோப்பையை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் ஐந்து முறை கோப்பையை முத்தமிட்ட ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து