ரஷ்ய - சீன அதிபர்களை அடுத்த மாதம் சந்திக்கப் போகிறேன்: டிரம்ப்

செவ்வாய்க்கிழமை, 14 மே 2019      உலகம்
trump 2019 02 20

வாஷிங்டன், ஜூன் மாதத்தில் ரஷ்ய தலைவர் புடினையும் ஜி ஜிங்பிங்கையும் சந்திக்க போகிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் அடுத்த (ஜூன்) மாதம் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டுக்கு இடையே, சீன அதிபர் ஜி ஜிங்பிங்கையும் ரஷ்ய அதிபர் புடினையும் சந்திக்க உள்ளதாக ரஷ்ய அதிபர் டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், அடுத்த (ஜூன்) மாதம் ஜப்பானில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் சீன அதிபரையும், ரஷ்ய தலைவரையும் சந்திக்க உள்ளேன். இந்த சந்திப்பு பயனுள்ளதாக அமையும் என்று நான் கருதுகிறேன் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து