Idhayam Matrimony

'உங்கள் கனவை சொல்லுங்க' திட்டம்: வரும் 8-ம் சென்னையில் துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

செவ்வாய்க்கிழமை, 6 ஜனவரி 2026      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, ஒவ்வொரு குடும்பத்தினரிடம் கனவை கேட்கும் திட்டம்தான் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் என தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில்மகேஷ், இந்த திட்டத்தை வருகிற 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. பல நிதி நெருக்கடி இருந்தாலும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை பார்த்து, நாமும் இதுபோன்ற திட்டத்தை கொண்டு வர வேண்டும் என பல மாநிலங்கள் நினைக்கிறது. தற்போது ’உங்கள் கனவை சொல்லுங்கள்’ என்ற புதிய திட்டம் குறித்து முதல்வர் கூறினார். ஒவ்வொரு குடும்பங்கள் சார்ந்து ஒரு சில திட்டங்கள் இருக்கும். அவர்களின் கனவை தெரிவிக்கும் வகையில், ’உங்கள் கனவை சொல்லுங்கள்’ என கருத்து கேட்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. ஒவ்வொரு குடும்பத்தினரிடம் கனவை கேட்கும் திட்டம்தான் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம்.

இதுவரை யாரும் செய்யாத நிகழ்வாக, உங்கள் கனவை கூறும் வகையில் வரலாற்று திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் தொடர்பான ஒரு படிவத்தில் 10 திட்டங்கள் இடம் பெற்றிருக்கும். இதில் மக்கள் முத்தாய்ப்பாக நினைக்கும் 3 திட்டங்களை கூறச்சொல்வோம். வீடு, குடும்பம், மாவட்டம் சார்ந்த கருத்துகளை தனிநபர் தெரிவிக்கும் வகையில் திட்டம் செயல்படும். இந்த திட்டத்தின் மூலம் 2030க்கும் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்ற ஒரு மிஷினரி டாக்குமெண்டை உருவாக்க முடியும் என முதல்வர் கருதுகிறார்.

வருகிற 9-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 30 நாட்கள் மக்களிடம் இருந்து கருத்துகள் பெறப்படும். 11-ம் தேதி முதல் இந்த திட்டம் தொடர்பான இணையதளம் செயல்பாட்டுக்கு வருகிறது. இணையதளம் மூலம் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை சொல்லலாம். இளைஞர்களின் கருத்துகளையும் கேட்கவுள்ளோம். அடுத்த மாதம் கருத்துகள் பெறப்பட்டு, மாவட்டம் தோறும் கருத்தரங்கம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து