ஜெயலலிதாவையே இழித்து பேசுமளவுக்கு தினகரனுக்கு வாய்க்கொழுப்பு அதிகரித்து விட்டது: அமைச்சர் ஜெயகுமார் தாக்கு

புதன்கிழமை, 15 மே 2019      தமிழகம்
jayakumar 2019 02 02

சென்னை : ஜெயலலிதாவையே இழித்து பேசுமளவுக்கு தினகரனுக்கு வாய்க்கொழுப்பு அதிகரித்து விட்டது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி. வருமாறு:-

உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் தினகரன் பேச்சை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.ஜெயலலிதா மீது பக்தி கொண்ட தொண்டர்கள் யாரும் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர் பேச்சை தொலைக்காட்சியில் பார்த்தேன். ஜெயலலிதாவை குற்றம் சொல்லும் அளவுக்கு தினகரன்.

சென்றிருக்கிறார். எம்ஜிஆர் ஆட்சியையே ஜெயலலிதா கலைத்தார் என்று பேசுகிறார். ஜெயலலிதா இல்லாத நிலையில் அவரை குற்றம் சொல்கிறார் என்றால் அது ஜெயலலிதாவுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். இதனை அதிமுக தொண்டர்கள் நினைக்கவேண்டும். அமமுக தொண்டர்கள் நினைக்க வேண்டும். அவர்கள்உடம்பில் அதிமுக ரத்தம் ஓடுகிறது என்றால் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை இழித்துப் பேசிய தினகரன் யார் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

10 ஆண்டுகள் ஊரை விட்டு ஒடி, திரும்பவும் தமிழ்நாட்டின் பக்கமே வராதவர் தினகரன்.நாடாளுமன்றம் செல்லாமல் இருந்தவர். அவருக்கு எம்பி பதவியை அளித்தது தன்னுடைய வாழ்நாளில் செய்த தவறு எனக் கருதி வீட்டுப் பக்கமே அவரை ஜெயலலிதா சேர்க்காமல் இருந்தார். அவருக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகி விட்டது. ஆட்டைக் கடித்து,மாட்டைக் கடித்து,கடைசியில் ஜெயலலிதாவையே குறை சொல்கிறார். இதுதான்தினகரனின் சுயரூபம்.தற்போது சுயரூபம் தெரிந்துள்ளது.இவ்வாறுஅமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து