அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றம்

வியாழக்கிழமை, 16 மே 2019      உலகம்
whitehouse 2017-12 31

வாஷிங்டன், அமெரிக்க மாகாணமான அலபாமாவில் கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் மசோதா நிறைவேறியது.

அமெரிக்காவில் கடந்த 1973-ம் ஆண்டுக்கு முன்னர் பெண்கள் தங்களின் கருவை கலைப்பது சட்டவிரோத செயலாக பார்க்கப்பட்டது. இதை எதிர்த்து பெண் உரிமை ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 1973-ம் ஆண்டு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு, கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

அதன்படி அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப், கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என பிரசாரம் செய்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எனினும் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார். அதனை தொடர்ந்து குடியரசு கட்சியினர் கவர்னர்களாக இருக்கும் மாகாணங்களில் கருக்கலைப்புக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவின் 16 மாகாணங்களில் கருக்கலைப்புக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அந்த வகையில் அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்புக்கு முழுமையாக தடைவிதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மசோதா தாக்கல் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் சட்ட மசோதா அலபாமா மாகாண சட்டசபையில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா கீழ்சபையில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது மசோதாவுக்கு ஆதரவாக 74 ஓட்டுகளும், எதிராக 3 ஓட்டுகளும் விழுந்தன. எனவே பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் கீழ்சபையில் அந்த மசோதா நிறைவேறியது. அதனை தொடர்ந்து, இந்த மசோதா நேற்று முன்தினம் மேல்சபையில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அங்கு மசோதாவுக்கு ஆதரவாக 25 ஓட்டுகளும், எதிராக 6 ஓட்டுகளும் விழுந்தன. இதன் மூலம், கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் மசோதா மேல்சபையிலும் வெற்றிகரமாக நிறைவேறியது. இதையடுத்து, இந்த மசோதா குடியரசு கட்சியை சேர்ந்த அலபாமா மாகாணத்தின் பெண் கவர்னரான கெய் இவேவின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து