வித்யாசாகர் சிலையை கட்டமைக்க பா.ஜ.க.வின் பணம் தேவையில்லை: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

வியாழக்கிழமை, 16 மே 2019      இந்தியா
Mamata Banerjee 2018 11 17

கொல்கத்தா, வித்யாசாகர் சிலையை மீண்டும் கட்டமைக்க பா.ஜ.க.வின் பணம் வேண்டாம் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் அமித்ஷா பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வினர் இடையே வன்முறை நேரிட்டது. அப்போது தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது. சிலையை உடைத்தது குறித்து இரு தரப்பினரும் மாறி மாறி பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் கொல்கத்தாவில் வித்யாசாகர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் என பிரதமர் மோடி கூறினார். இதற்கு பதிலளித்துள்ள மம்தா, வித்யாசாகர் சிலையை மீண்டும் கட்டமைக்க பா.ஜ.க.வின் பணம் வேண்டாம். எங்களால் வித்யாசாகர் சிலையை கட்டமைக்க முடியும் எனக் கூறியுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி பேசுகையில், கொல்கத்தாவில் மீண்டும் வித்யாசாகர் சிலையை கட்டமைத்து தருவதாக மோடி உறுதியளித்துள்ளார். எங்களுக்கு ஏன் பா.ஜ.க.வின் பணம்? மேற்கு வங்காளத்திடமே போதுமான வளம் உள்ளது. சிலைகளை சிதைப்பது பா.ஜ.க.வின் பழக்கமாகும். அவர்கள் திரிபுராவில் அதைதான் செய்தார்கள். பா.ஜ.க. மேற்குவங்காளத்தின் 200 ஆண்டுகால பாரம்பரியத்தை சிதைத்துள்ளது. இதுபோன்ற ஒருகட்சியை ஆதரிப்பவர்களையும் இந்த சமூகம் ஏற்காது. சமூக வலைதளங்களில் போலியான செய்தியை பரவச் செய்து பா.ஜ.க. வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்கிறது எனக் கூறியுள்ளார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து