முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாள் முன்பாகவே பிரச்சாரத்துக்கு தடை: பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது - மம்தா

வியாழக்கிழமை, 16 மே 2019      அரசியல்
Image Unavailable

கொல்கத்தா, பா.ஜனதாவின் கட்டுப்பாட்டின் கீழ் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.  

மேற்கு வங்கத்தில் 19-ம் தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. மாநிலத்தில் அமித்ஷா ஊர்வலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்களிடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு பெரிய வன்முறை வெடித்தது. இதனையடுத்து அரசியல் சட்டப்பிரிவு 324-ஐ கையிலெடுத்த தேர்தல் ஆணையம் ஒரு நாள் முன்னதாகவே அதாவது மே 16-ம் தேதி இரவு 10 மணியுடன் அனைத்து பிரசாரங்களும் முடித்துக் கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமித் ஷா தனது கூட்டத்தின் மூலம் வன்முறைகளை உருவாக்கியுள்ளார், வித்யாசாகர் சிலை சிதைக்கப்பட்டது. இதற்காக பிரதமர் மோடி வருத்தப்படவில்லை. மேற்கு வங்காள மக்கள் இதனை தீவிரமாக எடுத்துள்ளனர். அமித் ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்து பேசினார், தேர்தல் ஆணையத்திற்கு மிரட்டல் விடுத்தார். அதன் விளைவுதான் பிரசாரத்திற்கு ஒருநாள் தடையா? வங்க மக்கள் பயப்பட மாட்டார்கள். 

நான் மோடிக்கு எதிராக பேசுவதால்தான் மேற்கு வங்கம் இலக்காக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தை பா.ஜனதா நடத்துகிறது. இது இதுவரையில் இல்லாத ஒருநடவடிக்கையாகும். நேற்று வன்முறையே அமித் ஷாவால் நடத்தப்பட்டது. தேர்தல் ஆணையம் அமித்ஷாவிற்கு நோட்டீஸ் விடுக்காதது ஏன்? பிரசாரம் செய்ய தடை விதிக்காதது ஏன்? குண்டர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்தார்கள், அவர்கள் காவி நிறம் அணிந்துக்கொண்டு வன்முறையை நிகழ்த்தியுள்ளனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இருந்த வன்முறைகளை உருவாக்கியுள்ளனர். தேர்தல் கமிஷனின் முடிவு நியாயமற்றது, அரசியல் ரீதியாக ஒருசார்பானது.
மேலும் பேசுகையில், பிரதமர் மோடி உங்களால் உங்கள் மனைவியையே கவனித்துக் கொள்ளமுடியவில்லை, எப்படி நாட்டை கவனித்துக் கொள்வீர்கள்? எனக் கேள்வியையும் எழுப்பியுள்ளார் மம்தா பானர்ஜி. மாயாவதி இதுபோன்ற விமர்சனத்தை முன்வைத்ததால், தனிமனித தாக்குதலில் தரம் தாழ்ந்து விட்டார் என பா.ஜனதா விமர்சனம் செய்தது. இப்போது மம்தாவும் அதுபோன்று பேசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து