ராகுல் சொன்ன வார்த்தை எங்களது டிக்சனரியில் இல்லை: ஆக்ஸ்போர்டு

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      இந்தியா
Rahul Gandhi 2019 05 02

புது டெல்லி, ராகுல் காந்தி கூறியுள்ளது போல் ‘Modilie’ என்ற வார்த்தையே தங்களது டிக்ஸ்னரியில் இல்லை என்று ஆக்ஸ்போர்டு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகள் அனல்பறக்க தேர்தல் பரப்புரைகளை நடத்தி வருகின்றன. பரப்புரையின் போதும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். பிரதான கட்சிகளாக பா.ஜ.க, காங்கிரஸ் இருவரும் ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சமீபத்தில் ராகுல் காந்தி தன்னுடைய பக்கத்தில் இரண்டு பதிவிட்டிருந்தார்.

டுவிட்டரில் பதிவு

ஒன்று, ஆங்கில டிக்ஸனரியில் Modilie என்ற வார்த்தை உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். அதில், டிக்ஸ்னரியில் அந்த வார்த்தையை தேடுவது போன்ற படத்தினையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டிருந்தார். அதாவது மோடிலை என்றால் தொடர்ச்சியாக மோடியை போல் பொய் சொல்லுதல் என்ற அர்த்தத்தை குறிக்கும் என அதில் கூறப்பட்டிருந்தது. அதோடு, ‘Modilie’ என்ற இணையதள பக்கம் ஒன்றினையும் ராகுல் பதிவிட்டிருந்தார். அதில், உலகம் முழுவதும் ‘Modilie’ என்ற வார்த்தை மிகவும் பிரபலம் அடைந்து வருவதாக குறிப்பிட்டு இருந்தார். ராகுல் காந்தியின் இந்த டுவிட்டர் பதிவு இரண்டு தினங்களாக விவாதப் பொருளானது.

டிக்சனரியில் இல்லை

இந்நிலையில், ராகுல் காந்தி சொல்வது போல் ‘Modilie’ என்ற வார்த்தையே தங்களது டிக்ஸ்னரீயில் இல்லை என்று ஆக்ஸ்போர்டு தாமாக முன் வந்து தெரிவித்துள்ளது. ‘ மோடிலை என்ற வார்த்தையை தேடுவது போன்று உள்ள அந்த படம் போலியானது’ என்றும் அது விளக்கம் அளித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்னரீஸ்-ன் இந்த விளக்கத்தால் மோடிலை என்று சொன்ன ராகுலின் கருத்து பொய்யாகி விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து