எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரோம் : இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், பெடரர், ஜோகோவிச் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.
2-வது சுற்று...
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-0, 6-1 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் ஜெர்மை சார்டியை எளிதில் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ரோஜர் பெடரர்...
மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் 72-ம் நிலை வீரரான ஜோவ் சோய்சாவை (போர்ச்சுகல்) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-3 என்ற நேர்செட்டில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவாலோவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஒசாகா தகுதி...
பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-3, 6-3 என்ற நேர்செட்டில் சுலோவக்கியா வீராங்கனை சிபுல்கோவாவை சாய்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கோன்டா 6-7 (3-7), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
ஹாலெப் தோல்வி...
இன்னொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை வான்ட்ரோசோவா 2-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சிமோனா ஹாலெப்க்கு (ருமேனியா) அதிர்ச்சி அளித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா 6-0, 6-1 என்ற நேர்செட்டில் கஜகஸ்தான் வீராங்கனை புதின் சேவாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


