முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்

சனிக்கிழமை, 18 மே 2019      ஆன்மிகம்
Image Unavailable

தூத்துக்குடி : வைகாசி விசாக திருவிழாவையொட்டி, தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களிலும், முருகனின் அறுபடை வீடுகளிலும் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாகத் திருவிழா மிகவும் சிறப்புமிக்கதாகும். திருச்செந்தூர் கோயிலில் இத்திருவிழா, வசந்த விழாவாக கடந்த 9-ம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினமும் கோயிலில் உச்சிகால தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான நேற்று வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்றது. 

இதையொட்டி கோயிலில் அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்ந்தார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வருதலும், முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெற்றது. பின்னர், தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து திருக்கோயில் அடைந்தார்.

வைகாசி விசாக திருவிழாவையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்பதற்காக பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். ராமநாதபுரம், மதுரை, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வந்த 5 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கோயிலில் பொது தரிசன வழி, சிறப்பு வழிகளில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதே போல் திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, சுவாமி மலை, பழனி, திருத்தணி ஆகிய அறுபடை வீடுகளிலும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து