மல்யுத்த சூப்பர் ஸ்டார் மஸாரோ திடீர் மரணம்

சனிக்கிழமை, 18 மே 2019      விளையாட்டு
Wrestling star died 2019 05 18

பிரபல மல்யுத்த வீராங்கனை அஷ்லே மஸாரோ. மல்யுத்த சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்பட்ட அவர், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஸ்மித் டவுணில் வசித்து வந்தார். 2005- 2008 காலகட்டங்களில் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்தார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பட்டம் வென்றுள்ளார். அவருக்கு உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.

இடையில் மல்யுத்தத்தை விட்டு விலகி மாடல் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவர், மீண்டும் மல்யுத்தத்துக்குத் திரும்ப முடிவு செய்திருந்தார்.  இந்நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து