Idhayam Matrimony

இந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

நம்பிக்கையுடன்...

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் விளையாட கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்றிரவு லண்டன் செல்கிறது. தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.  விராட் கோலி பேசுகையில், “சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதை எங்களது எதிர்பார்ப்பு. நம்பிக்கையுடன் உலகக் கோப்பை தொடரில் விளையாட செல்கிறோம். இந்த ஐபிஎல் தொடரில் எங்களது வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினர்.

இரண்டு தூண்களாக...

நெருக்கடிகளை சமாளிப்பதே உலகக் கோப்பை தொடரில் முக்கியமானதாக இருக்கும். எங்களது பந்துவீச்சாளர்கள் அனைவரும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறார்கள். யாரும் சோர்வுடன் காணப்படவில்லை. குல்தீப், சாஹல் இருவரும் பவுலிங்கின் இரண்டு தூண்களாக இருப்பார்கள்.  அதிக ரன்களை குவிக்கும் போட்டிகளாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். கோடை காலம் என்பதால் இங்கிலாந்தின் கிளைமேட் அருமையாக இருக்கும். நான் பங்கேற்ற மூன்று உலகக் கோப்பைகளில் இந்தத் தொடர் மிகவும் சவாலானதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து