Idhayam Matrimony

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை வாங்க இந்தியாவுக்கு அனுமதி ஏன்? அமெரிக்க நிதியமைச்சர் விளக்கம்

சனிக்கிழமை, 7 மார்ச் 2026      உலகம்
Oil

டெல்லி, ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு இந்தியாவுக்கு அனுமதியளித்தோம் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானின் படைகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் போரால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்குவதாகவும், 30 நாள்களுக்கு மட்டும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் அமெரிக்க அரசு அறிவித்தது.

இந்த நிலையில், கடலிலுள்ள கப்பல்களில் சிக்கியுள்ள ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதற்கு அனுமதி அளித்துள்ளதாக, அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசண்ட் கூறியுள்ளார். இதுபற்றி, அவர் பேசியதாவது:- உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் சிறப்பாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கடலில் உள்ள ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்க நமது கூட்டாளிகளான இந்தியாவை அனுமதிக்க அமெரிக்க நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்தியர்கள் மிகவும் நல்ல நடிகர்கள். தடை விதிக்கப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டாம் என நாம் கூறியவுடன் அவர்கள் ஒப்புக்கொண்டனர். ரஷ்யாவுக்குப் பதிலாக அமெரிக்க கச்சா எண்ணெய்யை அவர்கள் வாங்கவுள்ளனர். ஆனால், எண்ணெய் விநியோகம் தற்காலிகமாகத் தடைப்பட்டுள்ளதால் அதைத் தீர்ப்பதற்காக ரஷ்ய எண்ணெய்யை வாங்க நாம் அனுமதி வழங்கியுள்ளோம்” எனக் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து