டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் - 28-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

புதன்கிழமை, 22 மே 2019      இந்தியா
cauvery 2019 05 22

புது டெல்லி : டெல்லியில் இன்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. தமிழக அரசு சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுத்தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

4 மாநில பிரதிநிதி...

சுப்ரீம் கோர்ட்  உத்தரவின்பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து கொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன.

காவிரியில் நீர்...

காவிரி மேலாண்மை ஆணையம் கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி கூடி ஆலோசனை நடத்தியது. அதே போல் ஒழுங்காற்று குழு கூட்டம் ஆகஸ்ட் 9-ம் தேதி நடந்தது. இந்த ஆண்டுக்கான காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்று கூட்டம் ஆகியவை ஒருமுறை கூட நடத்தப்படவில்லை. தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் மாதம் 12-ம் தேதி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் அது குறித்து ஆணையம் இதுவரை எந்த உத்தரவையும் வெளியிடவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மசூத் உசேன்...

இந்நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின்போது சுப்ரீம் கோர்ட் வரையறுத்தபடி, தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு வலியுறுத்த உள்ளது. இதே போல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் 6 மாதங்களுக்குப் பிறகு வரும் 28-ம் தேதி ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ளது. தமிழக அரசு சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுத்தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து