முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டிற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி ராம்நாத் உத்தரவு

புதன்கிழமை, 22 மே 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிதாக 4 நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணியிடங்கள்...

நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளன என்ற குற்றசாட்டு அடிக்கடி இருந்து வந்தது. இதில் உச்சநீதிமன்றமும் அடங்கும். மொத்தம் உள்ள 31 நீதிபதிகளில் எப்போதுமே 25 அல்லது 26 நீதிபதிகள் மட்டுமே பணியில் இருந்து வந்தார்கள்.  சுமார் 6 லிருந்து 7 பணியிடங்கள் எப்பொழுதுமே காலியாக இருந்து வருவதாக புகார்கள் எழுந்தன. அந்த வகையில் உச்சநீதிமன்றத்தில் தற்போது வரை 4 பணியிடங்கள் காலியாக இருந்தது. ஆனால் மொத்தமுள்ள 31 பணியிடங்களும் தற்போது நிரப்பப்பட்டு விட்டன. இதற்கான அரசாணையை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார்.

4 புதிய நீதிபதிகள்....

சூரியகாந்த், அனிருத்தா போஸ், போபன்னா, காவி ஆகிய நான்கு பேரும் புதிய நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் ஏற்கனவே அனிருத்தா போஸ், போபன்னா ஆகியோரை உச்சநீதிமன்ற அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திற்கே மத்திய அரசு திருப்பி அனுப்பி இருந்தது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜனாதிபதி ஒப்புதல்...

ஆனால் உச்சநீதிமன்றம் எந்தவொரு பின்வாங்கலும் இல்லாமல் கண்டிப்பாக அவர்களை நியமித்தே ஆகவேண்டும் என மீண்டும் பரிந்துரை செய்தது. இதையடுத்து மத்திய அரசுக்கு வேறு ஏதும் வாய்ப்பு இல்லாததால் உச்சநீதிமன்றத்தின் கோப்பை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்தது. தற்போது அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். நீதிபதிகளின் பதவி ஏற்பு இன்று அல்லது வெள்ளிக்கிழமை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

காவி என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் நான்காவது முக்கியமான நீதிபதியாக இருந்து வருகிறார். சூரியகாந்த், ஹிமாச்சல பிரதேசத்தின் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அனிருத்தா போஸ் உள்ளார். கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக போபன்னா உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து