புதிய அமைச்சரவை குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம்

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      இந்தியா
parliament 2018 3 6

புது டெல்லி, டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதில் பாரதீய ஜனதா மட்டும் 303 இடங்களை பிடித்துள்ளது. இந்தநிலையில், பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. புதிய அமைச்சரவை குறித்து விவாதிக்க கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது. அமைச்சரவையில் கூட்டணி கட்சியினருக்கு இடம் தருவது பற்றி ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து