ஐந்தாம் வகுப்பு பாடத்தில் ரஜினிகாந்த் பற்றிய தகவல்கள்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2019      சினிமா
rajinikanth 5th book 2019 06 10

சென்னை : ஐந்தாம் வகுப்பு பாடத்தில் ரஜினிகாந்த் பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த். 68 வயதிலும் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக விளங்குகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 2.0, பேட்ட ஆகிய இரண்டு படங்களும் பெரிய வெற்றியை பெற்றன. அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார்.அரசியல், நிர்வாகம், கலை, விளையாட்டு துறைகளில் சாதித்தவர்கள் பற்றிய தகவல்கள் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்களில் இடம்பெறும்.அந்த வகையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருக்கு பிறகு ரஜினிகாந்த் பற்றிய குறிப்பும் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரஜினிகாந்தின் புகைப்படமும் அவர் குறித்த செய்திகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன.வாழ்க்கையில் ஏழ்மையான நிலையில் இருந்து தனது கடின முயற்சியால் பெரும் பணக்காரர்களாகவும் புகழ் மிக்கவர்களாகவும் உயர்ந்தவர்கள் பற்றிய ‘ரேக்ஸ் டூ ரிச்சஸ் ஸ்டோரீஸ்’ என்ற பாடத்தில் ‘பேருந்து நடத்துனராக இருந்து பின் திரைத்துறையில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டாராக மட்டுமல்லாமல் ஒரு கலாச்சார அடையாளமாகவும் ரஜினிகாந்த் திகழ்கிறார்’ என்று குறிப்பிட்டு அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து