முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் தேசிய குழந்தை தொழிலாளா் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாணவ,மாணவிகள் விழிப்புணா்வு பேரணி.

புதன்கிழமை, 12 ஜூன் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

    ராமேசுவரம்  தேசிய குழந்தை தொழிலாளா் முறை எதிர்ப்பு தினத்தைத் முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் தொழிலாளா் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவா் தலைமையில்  குழந்தை தொழிலாளா் முறை எதிர்ப்பு குறித்த பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது.

கல்வி கற்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, குழந்தை தொழிலாளா் முறையினை முழுவதுமாக அகற்றிட விழிப்புணா்வு ஏற்படுத்திடும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ஆம் நாள் தேசிய குழந்தை தொழிலாளா் முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் நேற்றைய தினம் ராமநாதபுரம் அரண்மனை சாலையில் தொழிலாளா் துறையின் சார்பாக  குழந்தை தொழிலாளா் முறையினை அகற்றுவதற்கான விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்,விழிப்புணர்வு பேரணி உள்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தலைமை வகித்து பள்ளி மாணவ, மாணவியா்கள் பங்கேற்ற குழந்தை தொழிலாளா் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்தும்,கையெழுத்து இயக்கத்தையும் துவக்கி வைத்தார்.  இப்பேரணியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா்கள் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ராமநாதபுரம் அரண்மனை சாலையில் துவங்கி நகரில் முக்கிய வீதிகளில் பேரணியாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டு வந்தனர்.பின்னர் இந்த பேரணி ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது.அங்கு நிகழ்ச்சியில் தொடர்ந்து  மாணவ, மாணவியர்கள் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர் இப்பேரணி நிகழ்ச்சியில் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையர் சங்கர், மாவட்ட கல்வி அலுவலர் பிரேம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் துரைமுருகன், சைல்டு லையன் இயக்குநர் கருப்பசாமி உள்பட அரசு அலுவலா்கள், மாணவ, மாணவியா்கள் பங்கேற்றனா். இதனைத் தொடா்ந்து  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவா்  தலைமையில், அனைத்து துறை அரசு அலுவலா்களும் குழந்தை தொழிலாளா் முறை தின எதிர்ப்பு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனா் இந்த உறுதிமொழி நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் சி.முத்துமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.எஸ்.கண்ணபிரான் உட்பட அனைத்து துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து