முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் - அவை சுமூகமாக நடக்க ஒத்துழைக்க வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரி சபை 2-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர், முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் 38-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிப்பது, முத்தலாக் தடை உள்பட முக்கியமான பிரச்சனைகளுக்காக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று காலை நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ், மேலவை பா.ஜ.க. தலைவர் தவார் சந்த் கெலாட் உள்பட பலர் கலந்து கொண்டனர். 17-வது மக்களவையின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், அவையை எப்படி சுமூகமுடன் கொண்டு செல்வது என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். அரசியல் வேறுபாடுகளை புறம் தள்ளி தேசத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் டெரிக் ஓ’ பிரையன், தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து