முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 11 ஆயிரம் ரன்னை கடந்து கோலி சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

மான்செஸ்டர் : பாகிஸ்தானுக்கு எதிராக 57 ரன்கள் எடுத்திருக்கும் போது ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார் விராட் கோலி.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 57 ரன்களை எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது 11 ஆயிரம் ரன்களை பதிவு செய்தார். அவர் 222 இன்னிங்சில் இந்த ரன்னைக் கடந்தார். இதன் மூலம் 11 ஆயிரம் ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 276 இன்னிங்சில் 11 ஆயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது. விராட் கோலி தற்போது அதனை  முறியடித்துள்ளார். ரிக்கி பாண்டிங் 286 இன்னிங்ஸ் உடன் 3-வது இடத்திலும், கங்குலி 288 இன்னிங்ஸ் உடன் 4-வது இடத்திலும், கல்லீஸ் 293 இன்னிங்ஸ் உடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். சச்சின் தெண்டுல்கர் 10 ஆயிரம் ரன்னில் இருந்து 11 ஆயிரம் ரன்களை கடக்க 17 இன்னிங்ஸ் மட்டுமே எடுத்துக் கொண்டார். அதே போல்தான் விராட் கோலியும் 17 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்னில் இருந்து 11 ஆயிரம் ரன்களை கடக்க எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து