முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷா பெயரில் புதிய ரக மாம்பழம்: உ.பி.யில் அறிமுகம்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

பா.ஜ.க. தேசிய தலைவரும், புதிய மத்திய அமைச்சருமான அமித்ஷா பெயரில் புதிய ரக மாம்பழம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு ஷா மாம்பழம் என பெயரிட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹாஜி கலிமுல்லா கான். இவர் புகழ் பெற்ற தோட்டக்கலை நிபுணர் மற்றும் புதிய ரக பழங்களை உற்பத்தி செய்து வருகிறார். குறிப்பாக புதிய ரக மாம்பழங்களை அறிமுகம் செய்து வருகிறார். எனவே இவரை மாம்பழ மனிதர் என அழைக்கின்றனர். இவர் அமித்ஷா பெயரில் புதிய ரக மாம்பழத்தை உருவாக்கியுள்ளார். அதற்கு ஷா மாம்பழம் என பெயரிட்டுள்ளார்.

இது கொல்கத்தாவின் ஹஸ்னே - ஆரா மற்றும் லக்னோவின் புகழ்பெற்ற தூஸ்சேரி ரக மாம்பழங்களின் மரபணுக்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கலிமுல்லா கான் ஏற்கனவே பல புதிய ரக மாம்பழங்களை அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பிரதமர் நரேந்திர மோடி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் ஐஸ்வர்யாராய், நர்கீஸ் ஆகியோர் பெயரில் புதிய ரக மாம்பழங்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.

அமித்ஷா பெயரில் உருவாகியுள்ள புதிய ரக மாம்பழம் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. அமித்ஷாவின் வாழ்க்கையும், அரசியல் நிலைபாடுகளும் என்னை பெரிதும் கவர்ந்தது. அவரது நல்லெண்ணம், திறமையான செயல்பாடு மக்களை ஒன்றிணைத்துள்ளது. அவரை போன்றே ஷா மாம்பழமும் மிக இனிப்பாகவும், சுவையானதாகவும் இருக்கும் என்றார். கடந்த 2017-ம் ஆண்டில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெயரில் சுவை மிகுந்த அழகிய யோகி மாம்பழத்தை இவர் அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து