முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவ. 3-ம் தேதி அதிபர் தேர்தல்: பிரசாரத்தை துவக்கினார் டிரம்ப்

புதன்கிழமை, 19 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டிரம்ப் துவங்கினார்.

அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வதுஅதிபராக பதவியேற்றுக் கொண்டார். சமீபத்தில், 2-வது முறையாக தான் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக டிரம்ப் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் நேற்று முறைப்படி துவங்கினார். புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லண்டோவில் டிரம்ப் பிரசாரத்தை துவங்கினார். 2020- நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து