முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்: நெதர்லாந்தில் ரஷ்ய ராணுவ அதிகாரிகள் மீதான விசாரணை அடுத்த ஆண்டு தொடக்கம்

வியாழக்கிழமை, 20 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

நியூவேஜியன் : எம்.எச். 17 ரக பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ரஷ்ய ராணுவ அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது நெதர்லாந்து நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு விசாரணை தொடங்குகிறது. நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியா தலைநகர் கோலாம்பூருக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச். 17 ரக பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. உக்ரைன் நாட்டின் மேலே நடுவானில் சென்று கொண்டிருந்த போது அந்த விமானம் நடுவானில் வெடித்து சிதறியது. இதில் அதில் பயணம் செய்த 298 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 196 பேர்  நெதர்லாந்தை சேர்ந்தவர்கள். 38 பேர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

இது தொடர்பாக நெதர்லாந்தை சேர்ந்த பாதுகாப்பு நிர்வாகமும், கூட்டு விசாரணைக்குழு விசாரணை நடத்தி கடந்த 2015-ம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் பக் என்ற ஏவுகணையை ஏவி விமானம் தகர்க்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக கூட்டு விசாரணைக்குழு கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தெரிவித்த தகவலில் எம்.எச். 17 விமானம் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் தகர்க்கப்பட்டதை உறுதி செய்தது.

இது தொடர்பாக விமான விபத்தில் இறந்த நெதர்லாந்தை சேர்ந்த உறவினர்கள் அந்த நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நெதர்லாந்தை சேர்ந்த சர்வதேச புலனாய்வு அமைப்பை சேர்ந்தவர்கள் கூறும் போது , எம்.எச். 17 ரக பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 ரஷ்யர்கள், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான தாக்குதலில் தொடர்புடையதாக ரஷ்யாவை சேர்ந்த இகோர் கிர்கின், செர்ஜி டுபின்ஸ்கி, ஓலேக் புலடோவ், மற்றும் உக்ரைனை சேர்ந்த லியோனிட் கர்கென்கோ ஆகிய 4 பேர் அடையாளம் காணப்பட்டு நேற்று அவர்களுக்கு கைது வாரன்ட் பிறப்பித்துள்ளோம். அவர்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை ரஷ்யர்களும், உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்களும் மறுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து