முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் அவசர நிலை நீட்டிப்பு: சிறிசேனா உத்தரவு

சனிக்கிழமை, 22 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கையில் அவசர நிலையை நீட்டித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். உலக நாடுகளை உலுக்கிய இந்த சம்பவத்தை அரங்கேற்றிய பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணிகளில் இலங்கை அரசு தீவிரமாக இறங்கியது. குண்டுவெடிப்பை தொடர்ந்து அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அவசர நிலை அறிவிப்பு நேற்றோடு முடிவுக்கு வந்தது. இலங்கையில் பாதுகாப்பு நிலவரம் 99 சதவீதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்து இருந்தார். மேலும், மே மாத இறுதியில் ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தூதர்களை சந்தித்த இலங்கை அதிபர் சிறிசேனா ஜூன் 22-ம் தேதிக்கு பிறகு அவசர நிலை கெடுபிடிகள் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் அதிபர் சிறிசேனா, அவசர நிலையை நீட்டித்து திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளார். குண்டுவெடிப்பு குறித்து முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அலட்சியாக செயல்பட்ட ஐ.ஜி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலருக்கு எதிராக கிரிமினல் விசாரணை நடத்தப்பட்டு வருவதால் அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவசர நிலையை ஒரு மாதம் வரை நீட்டிக்க முடியும் என்று கூறியுள்ள இலங்கை அதிகாரிகள் பாராளுமன்றத்தில் 10 நாட்களுக்குள் ஒப்புதல் பெற வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து