எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கோயம்பேடு-அசோக்நகர் இடையே மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
சென்னையில் வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு மேலே நடந்து வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகளால், பச்சை வழித்தடத்தில் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை மெட்ரோ ரெயில் சேவைகள் வருகிற 15-ந்தேதியில் இருந்து 19-ந் தேதி வரை தற்காலிகமாக மாற்றியமைக்கப்படுகிறது.
நீல வழித்தடத்தில் (விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை அண்ணாசாலை டி.எம்.எஸ் வழியாக) இயக்கப்படும் சேவையில் நேரம் மற்றும் அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது.
ஆனால் பச்சை வழித்தடத்தில் மேற்கண்ட நாட்களில் காலை 5 மணி முதல் 6 மணி வரை பரங்கிமலையில் இருந்து அசோக் நகர் வரையிலும், விமான நிலையத்தில் இருந்து அசோக் நகர் வரையிலும் 14 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும். எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து கோயம்பேடு வரை 7 நிமிட இடைவெளியில் ரெயில் சேவை நடக்கும்.
கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை 15-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை காலை 5 மணி முதல் 6 மணி வரை தற்காலிகமாக சேவை நிறுத்தப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு மற்றும் அசோக் நகர் இடையே காலை 5 மணி முதல் 6 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. காலை 6 மணி முதல் மெட்ரோ ரெயில் சேவை வழக்கம் போல் தொடங்கும். வாரநாள், சனிக்கிழமை, ஞாயிறு கால அட்டவணை பின்பற்றப்படும்.
இந்த தற்காலிக மாற்றங்கள், 2-ம் கட்ட கட்டுமானப் பணிகள் சீராகவும், சரியான நேரத்திலும் நடப்பதற்கு அவசியமானவையாகிறது. பயணிகளின் சிரமத்துக்கு வருந்துகிறோம். பயணிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


