Idhayam Matrimony

பிரதமருக்கு குங்குமம் அனுப்ப போவதாக உத்தவ் சிவசேனா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2025      இந்தியா
Modi 2023 07 30

மும்பை, பிரதமருக்கு குங்குமம் அனுப்ப போவதாக உத்தவ் சிவசேனா அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி  இன்று நடைபெற உள்ளது. பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அந்த கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறியிருப்பதாவது:- பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் இன்றும் நடைமுறையில் உள்ளது. எனவே இந்தியா, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது துரோகம் ஆகும். கண்டிப்பாக இந்த போட்டியை பார்க்க பா.ஜனதா மந்திரிகளின் பிள்ளைகள் செல்வார்கள். இது தேச துரோகம்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை அன்று உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா சார்பில் ' சிந்தூர் ரக்சா' போராட்டம் நடைபெறும். மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு வீட்டில் உள்ள குங்குமத்தை (சிந்தூர்) பிரதமர் மோடிக்கு அனுப்ப உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து