மெஸ்ஸிக்கு ரசிகர்கள் வாழ்த்து

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      விளையாட்டு
Messi 2019 06 24

நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி நேற்று தனது 32 வது பிறந்தநாளை கொண்டாடுனார். கால்பந்தாட்டத்தில் பல்வேறு சாதனைகளைக் குவித்துள்ள மெஸ்ஸிக்கு சர்வதேச அரங்கில் மாபெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

தேசிய அணியான அர்ஜென்டினாவிற்கும், கிளப் அணியான பார்சிலோனாவிற்கும் அதிக கோல் அடித்தவர், ஐரோப்பிய கோல்டன் ஷூ விருதை அதிகமுறை வென்றவர், சாம்பியன்ஸ் லீக்கில் ஒரே போட்டியில் 5 கோல்களை அடித்த முதல் வீரர் என இவர் பெற்ற விருதுகளையும், சாதனைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம். கால்பந்தாட்டத்தில் மிக உயரிய பாலோன்- டி-ஆர் விருதை 2009 முதல் 2012 வரை தொடர்ந்து நான்கு முறை வென்று கால்பந்து ரசிகர்களையும், வல்லுநர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கால்பந்து அரங்கில் மிகப்பெரிய ஜாம்பவானாக ஜொலித்து வரும் மெஸ்ஸியால் இது வரை உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது மட்டும் தீரா தாகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று தனது 32-வது பிறந்த நாளைக் கொண்டாடிய மெஸ்ஸிக்கு, உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து