முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2026      உலகம்
Trump 2024-12-21

நியூயார்க், அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.

அமெரிக்கா-கனடா இடையே வர்த்தக போர் இருந்து வருகிறது. இதற்கிடையே சீனாவுடன் கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால் அந்த நாடு மீது 100 சதவீத வரி விதிப்பேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த கல்ப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஜெட் விமானங்களுக்கு சான்றளிக்க கனடா மறுத்ததற்குப் பதிலடியாக இந்த வரி நடவடிக்கை எடுக்கப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்தார். மேலும், அனைத்து கனடா விமானங்களுக்கும் சான்றிதழை அமெரிக்கா ரத்து செய்யும் என்றார்.

இந்த நிலையில் மேற்கு கனடாவில் எண்ணை வளம் மிக்க ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள பிரிவினைவாத குழுவிற்கும், அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையே ரகசிய சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கனடா பிரதமர் மார்க் கார்னி கூறும்போது, கனடாவின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து