எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, இந்நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.16,800-க்கு விற்பனையானது.தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் நேற்று உயர்ந்து விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.425-க்கும் பார் வெள்ளி 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
தங்கம் விலை கட்டுக்கடங்காத எகிறி உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் பெரிய அளவில் உயர்வு என்பது எப்போதாவது ஒரு நாள் இருக்கும். ஆனால் சமீப நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் விலை மாற்றம் கண்டு, சவரனுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையில் உயர்ந்து வருவதையே பார்க்க முடிகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் ஏற்றம் கண்டது.
இப்படியாக விலை ஏறிச்சென்றால், தங்கம் எட்டாக்கனியாகிவிடுமோ? என்ற அச்சம் நடுத்தர வர்க்கத்தினரிடையே நிலவி வருகிறது. இனிவரும் நாட்களிலும் விலை ஏற்றம் இருந்தாலும், அவ்வப்போது விலை சற்று குறையும் என்றே சொல்லப்படுகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. அதன்படி நேற்று முன்தினம் காலையில் கிராமுக்கு ரூ.370-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 960-ம் உயர்ந்து இருந்தது.
பின்னர் பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.280-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 240-ம் அதிகரித்தது. ஆக ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.650-ம், சவரனுக்கு ரூ.5 ஆயிரத்து 200-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 610-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 880-க்கும் விற்பனை ஆனது. இதன்மூலம் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை நேற்று முன்தினம் பதிவு செய்தது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.2 ஆயிரத்து 330-ம், சவரனுக்கு ரூ.18 ஆயிரத்து 640-ம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து ரூ.1,34,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.16,800-க்கு விற்பனையானது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் நேற்று உயர்ந்து விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.425-க்கும் பார் வெள்ளி 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


