இம்ரான் தாகீர் புதிய சாதனை

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      விளையாட்டு
Imran Tahir 2019 06 24

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் இம்ரான்தாகீர் 2 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் உலககோப்பையில் 39 விக்கெட் எடுத்து அதிக விக்கெட் கைப்பற்றிய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் வேகப்பந்து வீரர் ஆலன் டொனால்டை (38 விக்கெட்) முந்தினார்.

உலககோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியிலும் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் வருமாறு:-

1) மெக்ராத் (ஆஸ்திரேலியா) 71 விக்கெட்.
2) முரளீதரன் (இலங்கை) 68 விக்கெட்.
3) வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்) 55 விக்கெட்.
4) ஜாகீர்கான், ஸ்ரீநாத் (இந்தியா) 44 விக்கெட்.
5) இம்ரான் தாகீர் (தென் ஆப்பிரிக்கா) 39 விக்கெட்.
6) வெட்டோரி, ஓரம் (நியூசிலாந்து) 36 விக்கெட்.
7) இயன்போத்தம் (இங்கிலாந்து) 30 விக்கெட்.
8) வால்ஷ் (வெஸ்ட் இண்டீஸ்) 27 விக்கெட்.
9) சகீப் அல் ஹசன் (வங்காளதேசம்) 28 விக்கெட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து