முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெருப்புடன் விளையாடாதீர்கள் ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : நெருப்புடன் விளையாட வேண்டாம் என ஈரானை அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா விதித்த தடைகளை மீறி எண்ணெய் வர்த்தகத்தை மேற்கொள்ள ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உதவவில்லை என்றால், ஒப்பந்தப்படி அனுமதிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அதிகரிப்பதை தவிர வேறுவழியில்லை என்று ஈரான் கூறியிருந்தது. அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டதை விட மேம்படுத்தப்பட்ட யுரேனியத்தை அதிகாரிப்பதாக ஈரான் அறிவித்தது. ஐ.நா-வின் அணுசக்தி கண்காணிப்புக் குழுவும், சர்வதேச அணுசக்தி நிறுவனம், ஈரான் வரம்பை மீறியதாக உறுதிப்படுத்தியது. ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் மேலும் மீறிச் செல்ல வேண்டாம் என பிரிட்டன் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா கொடுத்த நெருக்கடியின் விளைவாகவே ஒப்பந்தம் சிதையும் நிலை ஏற்பட்டிருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியது. 

இதனிடையே, ஈரானின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்,  ஈரான் நெருப்புடன் விளையாடுவதாகவும், என்ன செய்கிறோம் என தெரிந்துதான் ஈரான் இதைச் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலக சக்திகளுடனான 2015 அணுசக்தி ஒப்பந்த வரம்பை ஈரான் மீறியதாக, ஐ.நா உறுதி செய்துள்ள நிலையில், அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரானுக்கு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்த அமெரிக்கா அதிபரிடம் கருத்து கேட்டபோது, ஈரானுக்கு எந்த செய்தியும் இல்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என அவர்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் யாருடன் விளையாடுகிறார்கள் என்பதும் தெரியும். அவர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என்று நினைக்கிறேன். எனவே, ஈரானுக்கு எந்த செய்தியும் இல்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து