முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழை: சறுக்கி சென்ற விமானத்தால் மும்பையில் பிரதான ஓடுபாதை மூடல்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : விமானம் சறுக்கியதால் சேதமடைந்த மும்பை விமான நிலைய பிரதான ஓடுபாதை மூடப்பட்டுள்ளது. அது செயல்பாட்டிற்கு வர 48 மணி நேரம் ஆகலாம்.

மகராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதனால், மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. கனமழை இன்னும் 3 தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் பஸ், ரெயில் மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் மும்பை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் பிரதான ஓடுபாதையில் தரையிறங்கிய போது, ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் விமானம் சறுக்கிக் கொண்டு சென்றதால் ஓடுதளம் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, பிரதான ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டு, இரண்டாம் நிலை ஓடுபாதையில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் விமான சேவை மிகவும் தாமதம் ஆகிறது. 52 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 55 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

குறிப்பாக, பெரிய விமானங்களை இயக்கும் அளவுக்கு இரண்டாம் நிலை ஓடுபாதை போதிய அகலம் இல்லாததால் சர்வதேச விமானங்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான ஓடுபாதை சரிசெய்யப்பட்டால் தான் அந்த விமானங்களை இயக்க முடியும். இதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனினும் மழை நீடிப்பதால், சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்து செயல்பாட்டிற்கு வர இன்னும் 48 மணி நேரம் வரை ஆகலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து