முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலில் கலக்கும் வெள்ள உபரி நீரை சேமிக்க காவிரி ஆற்றின் குறுக்கே 5 தடுப்பணைகள் கட்டப்படும் - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

திங்கட்கிழமை, 15 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : கடலில்  கலக்கும் வெள்ள உபரி நீரை சேமிக்க காவிரி ஆற்றின் குறுக்கே 5 தடுப்பணைகள் கட்டப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்,

குடிமராமத்து பணிகள் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித்துணைத் தலைவர் துரைமுருகன் மற்றும் தி.மு.க. உறுப்பினர் கே.என்.நேரு ஆகியோருக்கு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த பதில் வருமாறு:-

குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2016-2017 ஆம் ஆண்டில் 30 மாவட்டங்களில் 1,519 பணிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த 10.3.2017-ல் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் ஏரியில் குடிமராமத்துப் பணிகளை துவக்கி வைத்தேன். இக்குடிமராமத்துப் பணிகளில் விவசாய சங்கங்கள் அல்லது பாசன சபைகள் அல்லது ஆயக்கட்டுதாரர் மற்றும் ஆயக்கட்டுதாரர்களின் தொகுப்பினர் பணத்தட்டுப்பாடின்றி ஆரம்ப கட்ட பணிகளை தொடங்குவதற்கும், பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு முடிக்கவும் ஏதுவாக ஒப்பந்த மதிப்பில் 15 விழுக்காட்டினை முன்பணமாக வழங்கவும் அதனை 3 தொடர் பட்டியல்களில் பிடித்தம் செய்யவும் 29.10.2018 அன்று அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

நீர்வள ஆதாரத் துறையின் 15 வட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் குடிமராமத்துப் பணிகள் ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டன. 2019-2020 ஆம் ஆண்டில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 1,829 குடிமராமத்துப் பணிகளுக்கு 499.688 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பணிகள் துவங்கப்பட்டு முன்னேற்றத்தில் உள்ளன. இத்திட்டத்தினை கண்காணித்து செயல்படுத்த பாலாஜி, ஐ.ஏ.எஸ். சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 8 ஓய்வுபெற்ற பணியிலுள்ள பொறியாளர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

விவசாயிகள் குழுக்களை அமைத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பணிகளை தொய்வின்றி செயல்படுத்த மாவட்ட அளவிலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவேரி ஆறு கர்நாடகாவில் உள்ள குடகு மலையில் தலைக்காவிரி என்னும் இடத்தில் ஆரம்பித்து 320 கி.மீ தூரத்தில் தமிழக எல்லையில் மஞ்சகொண்டப்பள்ளி என்ற இடத்தில் வந்தடைகிறது. அதன்பின் தமிழகத்தில் 77 கி.மீ பயணித்து மேட்டூர் அணையை வந்தடைகிறது. தமிழ்நாட்டில் மேட்டூரிலிருந்து ஆரம்பித்து 338 கி.மீ தூரம் பயணித்து நாகை மாவட்டம் பூம்புகார் கிராமத்தில் கடலில் கலக்கும் இடம் வரை கீழ்க்கண்ட கட்டமைப்புகளின் மூலம் வெள்ள உபரிநீர் சேமிக்கப்படுகிறது.

மின்சார வாரியத்தால் கட்டப்பட்டுள்ள ஏழு தடுப்பணைகள் மூலம் 3.88 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் மாயனூர் கதவணையின் மூலம் 1.04 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு தடுப்பணையின் மூலம் 0.25 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணையின் மூலம் 0.27 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அணைக்கரை தடுப்பணையின் மூலம் 0.83 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுகிறது. காவேரி ஆறு மற்றும் கொள்ளிடத்தில் மேற்கண்ட கட்டமைப்புகள் மூலம் மொத்தம் 6.27 டி.எம்.சி வெள்ள மிகைநீர் சேமிக்கப்படுகிறது. மேலும் கொள்ளிடம் ஆற்றில் நாகை மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு இடையே ஆதனூர் ¬- குமாரமங்கலம் என்ற இடத்தில் தடுப்பணை அமைக்க ரூ. 428.00 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 0.32 டி.எம்.சி வெள்ள மிகைநீர் சேமிக்கப்படும்.

கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கு இடையே நஞ்சை புகளூர் கிராமத்தில் காவேரியின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிக்கு ஆய்வு முடிக்கப்பட்டு விபர மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 0.5 டி.எம்.சி வெள்ள மிகைநீரை சேமிக்க இயலும். மேலும் காவேரி ஆற்றின் குறுக்கே கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கிடையே ஒருவந்தூர் கிராமத்திலும், கரூர் மற்றும் திருச்சி மாவட்டத்திற்கு இடையே முசிறி கிராமத்திலும் கதவணை அமைக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கிடையே தூத்தூர் - வாழ்க்கை கிராமத்திலும், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்கிடையே கருப்பூர் - மாதிரி வேலூர் கிராமத்திலும் மற்றும் அளக்குடி கிராமத்திலும் தடுப்பணை அமைக்க ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆக மொத்தம் ஐந்து தடுப்பணைகள் கட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் 1.80 டி.எம்.சி வெள்ள மிகை நீரை சேமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து