எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசு ஊழியர்களின் 23 கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்தது தி.மு.க.தான் என்று தமிழ்நாடு சட்டசபையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
உங்கள் ஆட்சியில்...
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நேற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் குறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கமணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், 'எம்.எல்.ஏ. தங்கமணி அக்கறையோடு அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த அக்கறை உங்கள் ஆட்சியில் ஏன் இல்லை? ஆனால் நாங்கள் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கிட்டத்தட்ட 95 சதவீத கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கிறோம். அரசு ஊழியர்கள் போராடுவது அவர்கள் உரிமை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியைப்போல நாங்கள் அவர்களை இரவோடு இரவாக கைது செய்யவில்லை. சிறையில் அடைக்கவில்லை.
தொடர் பேச்சுவார்த்தை...
அரசு ஊழியர்களின் போராட்டங்களை இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்களைக் கொசைப்படுத்தி பேசியது எல்லாம் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறன். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். 23 ஆண்டு கால ஓய்வூதிய பிரச்னையை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம்.
23 ஆண்டுகால கோரிக்கை...
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்ததும் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது அ.தி.மு.க.வுக்கு பிடிக்கவில்லை. அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றினோம். அதனால்தான் கோட்டையில் எனது அறைக்கே வந்து எனக்கு இனிப்பு ஊட்டினார்கள். அரசு ஆசிரியர்களின்் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். மீண்டும் தி.மு.க. அரசுதான் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


