முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன் அரசியலில் இருந்து விலகல்

வியாழக்கிழமை, 22 ஜனவரி 2026      தமிழகம்      அரசியல்
OPS 2025-08-17

சென்னை, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரனும் எம்.இணைவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பெரம்பலூரைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. குன்னம் ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அரசியல் பொதுவாழ்வில் இருந்து விலகுகிறேன். குடும்பத்தினர் கூறியதால் தி.மு.க.வில் இணையும் முடிவில் இருந்து பின்வாங்கினேன். எனக்கு எந்த அரசியல் கட்சியிலும் இணையும் எண்ணமில்லை என்று தெரிவித்துள்ளார். குன்னம் ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்தார். ஏற்கனவே, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் என்று தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். குன்னம் ராமச்சந்திரனும் தி.மு.க.வில் இணைவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இன்று இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார்.

தி.மு.க.வில் இணைவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளாததால், அரசியலிலிருந்து விலகுவதாக இன்று அவர் கூறியிருக்கிறார். கடந்த 2016ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில், குன்னம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர். அ.தி.மு.க.வில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கினார். இதில் ஓ.பி.எஸ். ஆதரவாளராக இருந்த தஞ்சை ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. வைத்திலிங்கம் தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கிய பின், அண்ணா அறிவாலயம் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். வைத்திலிங்கத்துடன் அவரது மகன் பிரபுவும் தி.மு.க.வில் இணைந்தார். வைத்திலிங்கம் இதுவரை 4 முறை ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர், முன்னாள் அமைச்சராகவும் இருந்துள்ளார். 

ஏற்கனவே, ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். அ.தி.மு.க.வில் இருந்து விலகிய செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைந்தார். விரைவில் குன்னம் ராமச்சந்திரன் தி.மு.க.வில் இணைவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து