முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின் பேருந்துகள் லாபத்தில் இயங்குகின்றன - அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2026      தமிழகம்
Sivashankar 2023-05-08

சென்னை, மின்சார பேருந்துகள் லாபகரமாக ஓடுகிறது என சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

சட்டசபை கேள்வி நேரத்தில், ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.பி.ஜெயசங்கரன், 'ஆத்தூரில் இருந்து திருப்பதிக்கு பேருந்து இயக்க அரசு முன்வருமா?' என கேள்வி எழுப்பினார். அதற்கு, 'ஆத்தூர்-திருப்பதி வழித்தடம், தமிழ்நாடு, ஆந்திரா இரு மாநில எல்லைக்குட்பட்ட பகுதி ஆகும். எனவே இருமாநில ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் போது பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஜெயசங்கரன், 'தலைநகர் சென்னையில் தற்போது நூற்றுக்கணக்கான புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

இந்த புதிய பேருந்துகளை இயக்குவதற்கான உரிமைகள் தனியாருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், தினசரி கலெக்‌ஷன் தொகையை காட்டிலும் இருமடங்கு வாடகை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. அவ்வாறு எத்தனை பேருந்துகள் இயக்கப்படுகின்றன? எந்த நிறுவனத்துக்கு குத்தகைவிடப்பட்டிருக்கிறது? அதன் தொகை எவ்வளவு? அரசுக்கு ஆகும் கூடுதல் செலவு எவ்வளவு? என்ற துணைக்கேள்வியையும் அவர் எழுப்பினார். அதற்கு அமைச்சர் சிவசங்கர் அளித்த பதில் வருமாறு:-

மின்சார பேருந்துகள் தனியார் ஒப்பந்த பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. அது அந்த பேருந்துகளை தயாரிக்கும் அசோக்லைலாண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ''ஓம்'' நிறுவனம்தான் இயக்குகிறது. அவர்கள் தயாரிக்கும் வாகனத்தை அவர்களே தயாரித்து, அவர்களே இயக்குகிறார்கள். இதில் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை. மின்சார பேருந்துகள் லாபகரமாக ஓடுகிறது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து