முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூடானில் அதிகாரபகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

கார்டூம் : சூடானில் எதிர்க்கட்சியினருடன் ராணுவ ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

சூடானில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் 6 மாதங்களுக்கும் மேல் கடுமையான போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், போராட்டக் குழுவினருக்கும், ராணுவத்துக்கும் இடையே எத்தியோப்பியா மற்றும் ஆப்பிரிக்க யூனியன் பிரதிநிதிகள் முன்னிலையில் கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் பேச்சுவார்த்தை டைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், ஆட்சியதிகாரத்தை அரசியல் தலைமையிடம் படிப்படியாக ஒப்படைக்க ராணுவ ஆட்சியாளர்கள் ஒப்புக் கொண்டனர். அதற்கு முன்னதாக, அதிகாரத்தை எதிர்க்கட்சியினருடன் பகிர்ந்து கொள்ளவும் அவர்கள் சம்மதித்தனர்.

இந்த நிலையில், அரசியல் பிரகடனம் என்று பெயரிடப்பட்ட அதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும்  கையெழுத்திட்டனர். ஆளும் ராணுவ கவுன்சிலின் துணைத் தலைவர் முகமது ஹமாடன் டாகலோவும், போராட்டக் குழுத் தலைவர் அகமது அல் - ரபையாவும் அந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். புதிய ஒப்பந்தத்தன்படி, முதல் 18 மாதங்களுக்கு ராணுவத்திடம் இருக்கும் ஆட்சி, பிறகு சிவில் தலைமையிடம் ஒப்படைக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து