அமைச்சர் சித்துவின் ராஜினாமா ஏற்பு - பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் அறிவிப்பு

சனிக்கிழமை, 20 ஜூலை 2019      இந்தியா
sidhu-amrinthar 2019 07 20

சண்டிகார் : பஞ்சாப் அமைச்சராக இருந்த நவஜோத்சிங் சித்துவின் ராஜினாமாவை ஏற்பதாக அம்மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்கு எதிர்ப்பு குரல் எழுந்தது. முன்னாள் ராணுவ அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்ட பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கும், சித்துவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பேசினார். சில தினங்களுக்கு முன் பஞ்சாப் மாநில அமைச்சர் பதவி விலகல் கடித நகலை சித்து டுவிட்டரில் வெளியிட்டார். அதில், கடந்த ஜூன் 10 என தேதியிடப்பட்ட எனது கடிதம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திஜிக்கு அனுப்பப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து 15-ம் தேதி டுவிட்டர் செய்தியில், எனது பதவி விலகல் கடிதம் முதல் மந்திரிக்கு அனுப்பப்பட்டு விட்டது. அவரது அலுவலக இல்லத்தில் அது சேர்ந்து விட்டது என தெரிவித்தார். இந்நிலையில் பஞ்சாப் அமைச்சராக இருந்த காங்கிரஸ்  கட்சியின் நவஜோத் சிங் சித்துவின் ராஜினாமாவை ஏற்பதாக அம்மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். சித்துவின் ராஜினாமாவை, கவர்னர் விஜயேந்திர பால் சிங்கிற்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து