முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்தின் சிறந்த குடிமகன் விருதுக்கு கேன் வில்லியம்சனே மிக தகுதியானவர் - எனது வாக்கு அவருக்கே என்கிறார் பென் ஸ்டோக்ஸ்

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

நியூசிலாந்தின் சிறந்த குடிமகன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், கேன் வில்லியம்சனே அந்த விருதுக்கு தகுதியானவர் என்று பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். 84 ரன்கள் சேர்த்து போட்டி டையில் முடிய முக்கிய காரணமாக இருந்தார். அதன்பின் சூப்பர் ஓவரிலும் இங்கிலாந்து 15 ரன்கள் சேர்க்க முக்கிய காரணமாக இருந்தார். இதனால் பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்தில் பிறந்தவர். இவர் 12 வயது வரை நியூசிலாந்தில் வாழ்ந்தார். அதன்பின் இங்கிலாந்தில் குடியேறினார். பென் ஸ்டோக்ஸின் தந்தை ஜெரார்டு நியூசிலாந்துக்காக ரக்பி லீக்கில் விளையாடியுள்ளார். அதன்பின் இங்கிலாந்தில் பயிற்சியாளராக பணிபுரிந்தார். பின்னர் அவர் நியூசிலாந்துக்கு திரும்பிவிட்டார். ஆனால் பென் ஸ்டோக்ஸ் மட்டும் இங்கிலாந்திலேயே தங்கி விட்டார்.

இதனால் பென் ஸ்டோக்ஸும் நியூசிலாந்து குடிமகன்தான். இதனால் அவரது பெயரை சிறந்த குடிமகன் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளோம் என்று விருதுக்கான நபரை தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைமை நீதிபதி கேமரூன் பென்னெட் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சர்ச்சைக்குள்ளான இறுதிப் போட்டியின் சூழ்நிலையை சிறப்பாக கையாண்ட கேப்டன் கேன் வில்லியம்சன் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்தின் இந்த ஆண்டுக்கான சிறந்த குடிமகன் விருதுக்கு கேன் வில்லியம்சனே தகுதியானர். எனது வாக்கு அவருக்குத்தான் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பென் ஸ்டோக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் நியூசிலாந்தின் சிறந்த குடிமகன் விருதுக்கு எனது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. என்னுடைய நியூசிலாந்து மற்றும் மயோரி பாரம்பரியத்தால் நான் பெருமையடைகிறேன். ஆனால் இந்த விருதுக்கு என்னுடைய பெயர் பரிந்துரை செய்யப்படுவது சரியானது அல்ல. நியூசிலாந்து நாட்டிற்கு பெருமைய சேர்த்த ஏராளமான நபர்கள் இருக்கிறார்கள். நான் 12 வயதில் நியூசிலாந்தில் இருந்து இங்கிலாந்து வந்து குடியேறி விட்டேன். இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்ல நான் உதவியாக இருந்தேன். என்னுடைய வாழ்க்கை எல்லாம் இங்கிலாந்தில்தான். ஒட்டுமொத்த நாடும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஆதரவாக இருப்பதாக உணர்கிறேன். அவர் அந்த விருதுக்கு தகுதியானர். அவர் என்னுடைய வாக்கை பெறுகிறார் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து