முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் அக்டோபர் 4-ம் தேதி கருடசேவை

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி : திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கொடியேற்றமும், அக்டோபர் 4-ம் தேதி கருட சேவை, 7-ம் தேதி தேர்த்திருவிழா மற்றும் விழாவின் இறுதி நாளான 8-ம் தேதி சக்கர ஸ்நானம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது குறித்து தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறியதாவது:-

வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்குவதை முன்னிட்டு இதற்கான ஏற்பாடுகளும் இப்போதிலிருந்தே தொடங்கப்படுகிறது. பிரம்மோற்சவ விழாவில் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கொடியேற்றமும், அக்டோபர் 4-ம் தேதி கருட சேவை, 7-ம் தேதி தேர்த்திருவிழா மற்றும் விழாவின் இறுதி நாளான 8-ம் தேதி சக்கர ஸ்நானம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனையொட்டி போக்குவரத்து, பாதுகாப்பு, அன்னதானம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

வரும் 9-ம் தேதி வரலட்சுமி விரத விழா நடைபெற உள்ளதை யொட்டி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் 3-ம் வாரத்திலிருந்து லட்டு பிரசாதத்திற்கு சணல் பைகள் உபயோகப்படுத்தப்படும். திருமலையில் பிளாஸ்டிக்கை ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

திருமலையில் உள்ள அன்னமையா பவனில் நடந்த பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியில், இணை நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி நிருபர்களிடம் கூறுகையில்,

கடந்த 18-ம் தேதி முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதனால் புரோட்டோக்கால் வி.ஐ.பி.களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டது. இதன் மூலம் பல சிபாரிசு கடிதங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆதலால் தினமும் 4,500 முதல் 5,000 வரை சாமானிய பக்தர்கள் கூடுதலாக சாமியை தரிசித்து வருகின்றனர். இதுவே இனி தொடர்ந்து அமல்படுத்தப்படும். திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த ஜூலை மாதத்தில் மட்டுமே உண்டியல் மூலம் பக்தர்கள் ரூ.109.60 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர். இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை விட ரூ. 75,009 அதிகமாகும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து