முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாச வேலைக்கு தீவிரவாதிகள் முயற்சி: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் வெளியேற்றம் - அமர்நாத் யாத்திரை ரத்து : உஷார் நிலையில் விமானப்படை

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத இயக்கத் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் இப்ராஹிம் அசார் உள்ளிட்ட 15 பேர் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அமர்நாத் யாத்ரீகர்களை கொல்ல பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் அந்த நாட்டு ராணுவம் திட்டம் தீட்டியுள்ளதாக இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து அமர்நாத் யாத்திரைக்கு 4-ம் தேதி வரை திடீரென தடை விதித்துள்ள இந்திய ராணுவம் அனைவரையும் சொந்த ஊர் திரும்ப அறிவுறுத்தியுள்ளது.

காஷ்மீரில் துணை ராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருவது மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர்களான உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் முழு ராணுவ பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதிகளை தேடுதல் பணியும் தீவிரம் அடைந்தது. இந்நிலையில் சோபோர் பகுதியில் உள்ள மல்மாபன்போரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பாதுகாப்பு வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இந்நிலையில், ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத இயக்கத் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் இப்ராஹிம் அசார் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காஷ்மீர் எல்லையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீரில் நடைபெற இருந்த மாதா யாத்திரையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூலை 25 முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை நடைபெறும் மாதா யாத்திரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து