எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் சிறப்பு விருதுகளாக இனி வழங்கப்படும். இவையும் தலா 5 சவரன் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும். நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூபாய் 2 ஆயிரத்திலிருந்து மாதந்தோறும் ரூபாய் 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழ்நாட்டை ஆண்ட முதல்வர்களில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஆகியோர் கலைஞர்களின் நலன் காத்தவர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பொதுமக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் எப்போதும் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வேண்டும் என்ற நோக்கத்தில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் பல்வேறு நலத் திட்டங்களையும், விருதுகளையும் அறிவித்து அவர்களை ஊக்கப்படுத்தி வந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. கலையும், பண்பாடும் ஒன்றோடு ஒன்றாக பிணைந்தவை. தமிழ்நாட்டின் மரபுக் கலைகளின் வழியாக பண்பாட்டினை பாதுகாத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவும், இசைக்கலை, நாடகக்கலை, நாட்டியக் கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை ஆகியவைகளை இளைய தலைமுறையினருக்கு இசை மற்றும் கவின்கலைக் கல்வி பயிலகங்கள் வாயிலாக கொண்டு செல்லவும், இக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு கலைத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும் கலை பண்பாட்டுத் துறை என்ற ஒரு தனித்துறை டிசம்பர் மாதம் 1991-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கப்பட்டுள்ளது.
இத்துறையின் கீழ் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய முத்தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் என்ற அமைப்பு நமது மாநிலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு போதுமான நிதியுதவி வழங்கி, தொன்மையான கலைகளை வளர்த்தல், அக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலை வடிவங்களை ஆவணமாக்கி அவற்றை மீட்டெடுத்தல், நாடகம், நாட்டிய நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல், தமிழக பாரம்பரிய கலைகளை வெளி மாநிலங்களிலும், உலகளவிலும் எடுத்துச் செல்லுதல் போன்ற பணிகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் மேற்கொண்டு வருகின்றது.
இந்த சீர்மிகு விழாவில் இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், சின்னத்திரை, கிராமியக் கலை மற்றும் இதர கலைத் துறைகளில் சிறந்து விளங்கும் 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதில் 72 வகையிலான கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. மேலும், 8 மூத்த கலைஞர்களுக்கு அவர்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, தலா 25 ஆயிரம் ரூபாய் பொற்கிழி, கலை வளர்ச்சிக்கு பாடுபட்ட மூன்று தன்னார்வ நிறுவனங்களுக்கு கேடயம், சிறந்த முறையில் செயல்பட்டு வரும் ஒரு நாடகக் குழுவிற்கு சுழற்கேடயம், புகழ் பெற்ற இயல், இசை, நாட்டியக் கலைஞர்களுக்கு முறையே பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரஸ்வதி ஆகியோர் பெயரில் ஒன்பது கலைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், பட்டயமும் இந்த விழாவில் வழங்கப்படவுள்ளது. முதிய கலைஞர்களுக்கு அவர்கள் செய்த சேவைக்காகவும், வளர்ந்து வரும் இளைய இளைஞர்கள், ஊக்கமுடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவும் இங்கே விருதுகள் வழங்கப்படவுள்ளது.
நம் நாட்டு விடுதலைக்காக நடைபெற்ற போராட்டங்களும், நமது மொழி காக்க நடைபெற்ற போராட்டங்களும் வெற்றியடைந்ததில் கலைஞர்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானது. நாட்டு மக்களிடையே மொழி உணர்வு, சுதந்திர உணர்வு ஏற்படுவதற்கு பல்வேறு இசைக் கருவிகளுடன் கலைஞர்கள் வீதிதோறும் பாடிய பாடல்களும், நாடக மேடைகளில் பேசிய வசனங்களும் அடிப்படையாக அமைந்தன. கலைஞர்கள், நாம் நாட்டுக்காக வாழ்கிறோம் என்பதையும், நமது கலை, நாட்டு மக்களுக்காக, மக்களை மகிழ்விப்பதற்காகத் தான் என்பதையும் உணர்ந்து, கலைக்கு உயரிய சேவையையும் பங்களிப்பையும் அளிக்க வேண்டும். கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்ற ஆன்றோர் மொழிக்கேற்ப, கலைத் துறையில் உலகளவில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கலைஞர்கள், தான் கற்ற கலையின் ஆரம்ப நிலையிலேயே நிற்காமல், மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தங்கள் திறமைகளை அடிக்கடி புதுப்பித்துக் கொண்டே, தான் பயின்ற கலையில் நிபுணத்துவம் பெற வேண்டும். அவ்வாறு பெற்ற நிபுணத்துவத்தை தங்கள் கலைகளில் முறையாகக் கையாண்டு தாங்கள் சார்ந்த கலைக்கு மெருகேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கலைமாமணி பட்டம்’ பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் உங்கள் திறமைகளை மேன்மேலும் வளர்த்துக் கொண்டு நீங்கள் ஏற்றுக் கொண்ட கலைக்கு சிறந்த தொண்டாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே, இங்கே இருக்கின்ற கலைஞர் பெருமக்கள் சில கோரிக்கைகளை வைத்திருக்கின்றார்கள். இங்கே கலைமாமணி விருது வழங்குகின்ற பொழுது இந்தக் கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றித் தர வேண்டுமென்று அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். அந்தக் கலைஞர் பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று அரசால் கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிட விரும்புகின்றேன். கலைமாமணி விருது 3 சவரனுக்கு பதிலாக இனி 5 சவரன், அதாவது 40 கிராம் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலித பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் சிறப்பு விருதுகளாக இனி வழங்கப்படும். இவையும் தலா 5 சவரன் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும். நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூபாய் 2 ஆயிரத்திலிருந்து மாதந்தோறும் ரூபாய் 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2025.
24 Oct 2025 -
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி
24 Oct 2025உளுந்தூர்பேட்டை: சேலம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
ரூ.42.45 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
24 Oct 2025சென்னை, ரூ.42.45 கோடியில் நடந்த மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொல்காப்பியப் பூங்காவை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: வங்கக்கடலில் அக். 27-ம் தேதி உருவாகிறது 'மோந்தா' புயல் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
24 Oct 2025சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
24 Oct 2025சென்னை, முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை?
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் விவரத்தை தெரித்
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
வருகிற 30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்
24 Oct 2025வாஷிங்டன், தென்கொரியாவில் வருகிற 30-ம் தேதி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார்.
-
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி ஆர்.ஜே.டி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்கு
24 Oct 2025பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.
-
வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
24 Oct 2025மேட்டூர்: வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிப்பட்டுள்ளதை அடுத்து சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி உள்ளிட
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
24 Oct 2025புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
குண்டு வைக்க சதி: டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
24 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் பயங்கரம்: ஆம்னி பேருந்து தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு 18 பேர் படுகாயம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
24 Oct 2025கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்ச
-
பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்டியா கூட்டணிக்குள் போட்டி
24 Oct 2025பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்டியா கூட்டணிக் கட்சியினர் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
-
தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன்? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
-
துபாயில் இந்திய மாணவர் உயிரிழப்பு
24 Oct 2025துபாய்: துபாய் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் துவக்கம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
24 Oct 2025சென்னை: மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
24 Oct 2025டெல்லி: டெல்லியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வெள்ளிக்கிழமை காலை நான்கு பள்ளிகளுக்கு வந்த மின்னஞ்சல்களால் பரபரப்பு நிலவியது.
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Oct 2025சென்னை: போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
24 Oct 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து அங்கு தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்க
-
என்றும் மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
24 Oct 2025சென்னை: மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


