முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைகளை முறையாக கையாண்டு மெருகேற்ற கலைஞர்களுக்கு முதல்வர் சொன்ன குட்டிக்கதை

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தங்கள் கலைகளில் முறையாகக் கையாண்டு தாங்கள் சார்ந்த கலைக்கு மெருகேற்ற வேண்டும் என்று சிவன் - பார்வதி குட்டிக்கதை கூறி கலைஞர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அப்போது அவர் கூறிய கதை வருமாறு:-

ஒரு முனிவர் மரத்தடியில் அமர்ந்து தனது கிழிந்த வேட்டியை தைத்துக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமானும், பார்வதி தேவியும் அவ்வழியே சென்று கொண்டிருந்தனர். மரத்தடியில் இருந்த முனிவரைப் பார்த்ததும், அவருக்கு ஏதேனும் வரம் கொடுத்து விட்டுப் போகலாம் என சிவபெருமானிடம் பார்வதி தேவி கூற, வரம் கேட்கும் நிலையெல்லாம் கடந்தவர் அந்த முனிவர், எனவே நாம் போகலாம் என்றார் சிவபெருமான். ஆனால் விடாமல் பார்வதி தேவி வற்புறுத்தியதால், இருவரும் அந்த முனிவரிடம் சென்று வணக்கம் தெரிவித்தனர். அவர்களைப் பார்த்த முனிவர், அடடே, எம்பெருமானும், பெருமாட்டியுமா, வரணும் என்று வரவேற்று உபசரித்தார். உபசரித்து விட்டு தன் வேலையைத் தொடர்ந்தார். இதைப் பார்த்த சிவபெருமானும், பார்வதி தேவியும் சரி நாங்கள் விடை பெறுகிறோம் என்றனர். அதற்கு முனிவர், மகிழ்ச்சியாய் போய் வாருங்கள், வணக்கம் என்று சொல்லி, தனது வேலையில் மூழ்கினார்.

இதைப் பார்த்த சிவபெருமான், முனிவரே, நாங்கள் ஒருவருக்கு காட்சி கொடுத்து விட்டால், வரம் கொடுக்காமல் போவதில்லை, எனவே ஏதாவது வரம் கேளுங்கள், கொடுக்கிறோம்"" என்று கூறினார். அதற்கு முனிவர், """"தங்கள் தரிசனமே எனக்குப் போதும், வரம் எதுவும் வேண்டாம்"" எனக் கூறி தனது பணியைத் தொடர்ந்தார். வரம் கொடுக்காமல் செல்ல மாட்டோம் என்று சிவபெருமானும், பார்வதி தேவியும் பிடிவாதம் பிடிக்கவே, முனிவர், """"நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போக வேண்டும், அது போதும்"" என்றார். """"ஏற்கனவே, அது தானே நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு நாங்கள் ஏன் வரம் தர வேண்டும்"" என பார்வதி தேவி கேட்டார். அதற்கு முனிவர், """"அதைத் தான் நானும் கேட்கிறேன், நான் ஒழுங்கு தவறாமல் நடந்து வந்தால், வர வேண்டிய பலன் தானாகப் பின்னால் வரும், இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தர வேண்டும்"" எனக் கேட்டார். முனிவரின் விளக்கத்தைக் கேட்ட சிவபெருமானும், பார்வதி தேவியும் சிரித்து விட்டு மகிழ்ச்சியாய் சென்றனர். இந்தக் கதையில் வரும் முனிவரைப் போல, கலைஞர்களாகிய நீங்களும், உங்கள் துறைகளில் முழு மனதுடன் ஈடுபட்டதால் தான், உங்களுக்குரிய அங்கீகாரமான இந்த கலைமாமணி விருது உங்களைத் தேடி வந்திருக்கிறது என்று முதல்வர் இ.பி.எஸ் தெரிவித்தார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து