காஷ்மீரில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வரும் 19-ம் தேதி முதல் திறக்கப்படும்

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2019      இந்தியா
jammu and kashmir 2018 10 16

காஷ்மீரில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வரும் 19-ம் தேதி முதல் திறக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

இந்திய அரசியல் சட்டம் 370-வது பிரிவின்படி காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதை போல அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படுகிறது. இந்த நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வரும் திங்கள் கிழமை (ஆக.19) முதல் செயல்பட துவங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளூர் நிர்வாகம் நிலமையை ஆய்வு செய்த பிறகு அதன் அடிப்படையில் திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து