முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புவியின் வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திராயன் - 2 - செப்டம்பர் 7-ம் தேதி தரையிறங்கும்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

சென்னை : புவி வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் வட்டப்பாதையில் சந்திராயன் -2 சுற்றத் தொடங்கியது. செப்டம்பர் மாதம் 7-ம் தேதி அது தரையிறங்கும். 

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் கடந்த ஜூலை 22-ம் தேதி ஏவப்பட்டது சந்திராயன் -2 செயற்கைக்கோள். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்ட சந்திராயன் -2 முதலில் புவி வட்டப்பாதையில் வட்டமடித்தது. அதன்பின் கடந்த 14-ம் தேதி, புவி வட்டப்பாதையில் இருந்து விடுபட்டு, நிலவின் வட்டப்பாதையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியது. இந்தப் பயணம் நேற்று காலை 9.30 மணியோடு நிறைவடைந்தது. அதன்படி புவியின் வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திராயன் -2 தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையை வெற்றிகரமாக எட்டியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அதன்படி வரும் 21, 28, 30 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திராயன் -2-வின் பாதை திருத்தியமைக்கப்படும். செப்டம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு நிலவைக் குறைந்தபட்சம் 114 கிலோ மீட்டர், அதிகபட்சம் 128 கிலோ மீட்டர் என்கிற தூரத்தில் சுற்ற ஆரம்பித்தவுடன், ஆர்பிட்டரில் இருந்து செயற்கைக்கோள் பிரிந்து நிலவின் தரைப் பகுதியை நோக்கிப் பயணிக்கும். செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் சந்திராயன் - 2 இறங்கும். நிலவை ஆராயும் இந்தியாவின் முயற்சியில் சந்திராயன் -2 முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

திட்டமிட்டபடியே சந்திரயான் 2 நிலவை நோக்கி முன்னேறியது. முதல் நாளில் இருந்து எப்படி திட்டமிடப்பட்டதோ, அப்படியே சந்திரயான் 2 சீரான முன்னேற்றம் பெற்று வருகிறது. நாளை(இன்று) முதல் அடுத்த 4 நாட்களுக்கு அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழும். வரும் செப்டம்பர் 2-ம் தேதி மற்றொரு முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது. அன்றைய தினம் விக்ரம் லேண்டர் சந்திராயனில் இருந்து பிரியும். இது பெருமைக்குரிய ஒரு நிகழ்வு. நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி சந்திரயான் - 2 தரை இறங்கப் போகிறது. வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி, திட்டமிட்டப்படி அதிகாலை 1.55 மணி அளவில் சந்திரயான் 2 தரை இறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து