ம.பி. முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர் மரணம் - பிரதமர் மோடி இரங்கல்

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019      இந்தியா
Babulal Gaur died 2019 08 21

போபால் : மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பாபுலால் கவுர் நேற்று காலமானார். அவருக்கு வயது 89.

மத்திய பிரதேச மாநில முன்னாள் பாபுலால் கவுர் (வயது 89), முதுமை சார்ந்த உடல்நல பாதிப்புகள் மற்றும் ரத்த அழுத்தம் குறைந்ததால் போபால் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஒருவார காலமாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை மரணம் அடைந்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வின் முன்னணி தலைவராக விளங்கிய பாபுலால் கவுர், கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை முதல் அமைச்சராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பாபுலால் கவுர் பல ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்தவர். ஜனசங்கம் கட்சியில் இருந்த போது, கட்சியை வலுப்படுத்த தொடர்ந்து பணியாற்றியவர். மத்திய பிரதேச அமைச்சராகவும், முதல்வராகவும் பணியாற்றி மாநில வளர்ச்சிக்கு பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து