ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் டெல்லியில் கைது

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019      இந்தியா
P Chidambaram 2019 08 21

ஐ.என்.எஸ். மீடியா பணபரிமாற்ற முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் தரப்பு நேற்று மேல்முறையீடு செய்தது. ஆனால், மனுபட்டியலிடப்படவில்லை. இதனையடுத்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுப்பு தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா, தலைமை நீதிப தியை அணுகுமாறு கூறினார்.
இதையடுத்து, அயோத்தி தொடர்பான வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி இடம் பெற்றிருந்ததால், அந்த வழக்கு விசாரணை முடிந்த பின், தலைமை நீதிபதியிடம் முறையிட ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் முடிவு செய்திருந்தனர்.
ஆனால், அயோத்தி வழக்கு முடிந்ததும் அரசியல் சாசன அமர்வு கலைந்து சென்றது. 
இந்நிலையில், ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு நாளை (வெள்ளிக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  சுப்ரீம் கோர்ட் எந்த உத்தரவையும் பிறப்பிக்காததால், அவரை கைது செய்ய தடையில்லை. முன் ஜாமீன் மனு பட்டியலிடப்படாத நிலையில் நேற்று விசாரணை நடைபெறவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு சி.பி.ஐ. அதிகாரிகள்  டெல்லியில் ஜோர்பாக் நகரில் உள்ள சிதம்பரம் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து