முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறது பிரான்சில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

இந்தியா வளர்ச்சியின் பாதையில் செல்வதாக பிரான்சில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.

ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடிக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாட்டு தலைவர்களும் காஷ்மீர் உள்பட பிற முக்கிய விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் மக்ரோன், இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினையை இருதரப்பும் பேசி தீர்க்க வேண்டும், மூன்றாம் தரப்பு தலையிடக் கூடாது என்றார்.

யுனெஸ்கோ தலைமையகத்தில் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா, பிரான்ஸ் இடையேயான நட்பு உடைக்க முடியாதது. இந்தியாவும் பிரான்சும் பகிர்ந்து கொள்ளும் உறவு நட்பை விட பெரியது. இந்தியா, பிரான்ஸ் வரலாற்று உறவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்தியாவில் பிரான்ஸ் கால்பந்து அணிக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. வளர்ச்சியின் பாதையில் இந்தியா வேகமாக நகர்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் நிறைய சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கூட்டு ஒத்துழைப்பு காரணமாக நாங்கள் நிர்ணயித்த இலக்கை அடைந்துள்ளோம். இன்றைய புதிய இந்தியாவில், ஊழல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் இதுபோன்ற நடவடிக்கை கிடையாது. ஊழலுக்கு புதிய இந்தியாவில் இடம் கிடையாது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 75 நாட்களுக்குள் நாங்கள் பல வலுவான முடிவுகளை எடுத்துள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து